Thursday, February 03, 2005

ஓ மரியா, ஓ மரியா!

மரியா என்ற மிக அழகிய லத்தீனப் பெண் ஜோஸ் என்ற வாலிபனைக் காதலித்தாள். அவனை மணமுடிக்க விரும்பி தன் தந்தையிடம் அச்சேதியை தெரிவித்தாள். அவரோ, "நீ அவனை மணக்க இயலாது. ஜோஸ் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன் அம்மாவுக்கு இவ்விஷயம் தெரியாது. அவளிடம் இது குறித்து மூச்சு விடாதே!" என்றார்.

மரியாவும் ஒரு நல்ல மகளாக, ஜோஸை மறந்து விட்டு, ரிச்சர்ட் என்ற வாலிபனை மணக்க முடிவு செய்து, தந்தையிடம் கூறியபோது, அவர் மறுபடியும், "ஐயோ, நீ ரிச்சர்டையும் மணமுடிக்க இயலாது. அவனும் உனக்குச் சகோதரன் முறை தான். தயவு செய்து இதை உன் அம்மாவிடம் சொல்லி விடாதே!" என்று தடை விதித்தார்.

தன் தாயிடம் சென்று ஆலோசனை கேட்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுணர்ந்த மரியா, அவரிடம் சென்றாள். மகளின் பிரச்சினையை ஏற்கனவே அறிந்திருந்த மரியாவின் தாய், "என் கண்ணே! ஜோஸ் அல்லது ரிச்சர்ட், இவர்களில் யாரை மணந்தால் நீ மகிழ்ச்சி அடைவாயோ, அவனை மணந்து கொள்ளலாம்! ஏனெனில், உன் அப்பா, எனக்குத் தான் கணவர், நான் அறிந்தவரை உன்னுடன் அவருக்கு உறவுமுறை கிடையாது!!!" என்றார்.

1 மறுமொழிகள்:

Boston Bala said...

:))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails